பிரியாணி சாப்பிட்ட 150 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!
150 medical students admitted to hospital after eating biryani
செங்கல்பட்டு மாவட்டத்தை அடுத்த கேளம்பாக்கத்தில் அமைந்துள்ள செட்டிநாடு மருத்துவ கல்லூரியில் படித்து வரும் மாணவர மாணவிகள் 28 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் செட்டிநாடு மருத்துவமனையில் நேற்று பிற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கல்லூரி விடுதியில் மதிய உணவுக்காக பிரியாணி செய்துள்ளனர். பிரியாணி சாப்பிட்ட பின்பு 28 மருத்துவ மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரையும் செட்டிநாடு மருத்துவமனையில் நேற்று மதியம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். பிரியாணி சாப்பிட்ட சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கும் வாந்தி மயக்கம் ஏற்படும் அறிகுறி தென்பட்டதால் அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் செட்டிநாடு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
English Summary
150 medical students admitted to hospital after eating biryani