திருநெல்வேலியில் 17 கிலோ 550 கிராம், போதை பொருள் பறிமுதல்; ஒருவரை கைது செய்துள்ள போலீசார்..!
17 kg 550 grams of narcotics seized in Tirunelveli
திருநெல்வேலி மாவட்டத்தில் 17 கிலோ 550 கிராம் போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
நெல்லை விக்கிரமசிங்கபுரம் போலீசாருக்கு போதைப்பொருட்கள் விற்பனை குறித்து தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது விக்கிரமசிங்கபுரம் மெயின் ரோட்டின் அருகே சந்தேகப்படும் படியாக நின்றவரை பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர்.
விசாரணையில், அவர் சிவந்திபுரத்தை சேர்ந்த சின்னதுரை (வயது 33) என்பது தெரிய வந்துள்ளது. அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட 17 கிலோ 550 கிராம் போதைப்பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் சின்னதுரையை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடமிருந்து புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்துள்ளனர்.
English Summary
17 kg 550 grams of narcotics seized in Tirunelveli