இலங்கையில் இருந்து கடல் வழியாக கடத்தி வந்த ரூ.18.34 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


இலங்கையிலிருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்ட ரூ.18.34 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகளை வருவாய் புலானய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இலங்கையில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகள் மதுரை-ராமநாதபுரம் வழியாக குறிப்பிட்ட பதிவெண் கொண்ட காரில் தங்கத்தை கொண்டு செல்வதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து வருவாய் புலானய்வு பிரிவு அதிகாரிகள் மதுரை-ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்பொழுது அந்த வழியாக குறிப்பிட்ட பதிவெண் கொண்ட கார் வந்த போது அதனை மடக்கி பிடித்து அதிகாரிகள், காரில் இருந்த 3 பேர் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்பு காரில் இருந்த ரூ.18.34 கோடி மதிப்புடைய 35.6 கிலோ வெளிநாட்டு தங்கக்கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

18 crore worth of smuggled gold bars seized


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->