ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான கிராமத்திற்கு 2.50 கோடி நிதி ஒதுக்கீடு.. தமிழக அரசு உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம் குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் அருகே விழுந்து நொறுங்கி எரிந்தது. இந்த சம்பவத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். தீ காயங்களுடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான போது அப்பகுதி மக்கள் மீட்புப் பணியில் பல்வேறு உதவிகளை செய்தனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அந்த பகுதி மக்களுக்கு மாதம் ஒருமுறை ராணுவ மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என லெப்டினண்ட் ஜெனரல் அருண் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், நஞ்சப்பசத்திரம் கிராமத்திற்கு அடிப்படை வசதிகளான நடை பாதை வசதி, தடுப்பு சுவர், பழுதான வீடுகளை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் ரூ. 2 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 5 crore nanjappa chathiram village


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->