சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பயங்கர விபத்து - 2 பேர் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய பயங்கர விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்து உள்ளனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி வடகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (31). இவர் நேற்று இரவு காரில் குகன் (18) என்பவருடன் சிதம்பரத்திலிருந்து புவனகிரி நோக்கி சென்று கொண்டிருந்தார். 

அப்பொழுது வடகறி ராஜபுரம் குளத்து மேட்டு பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் (43) மற்றும் அவரது தங்கை புனிதா (38) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சிலுவை புறம் பேருந்து நிலையம் அருகே வந்தபோது, அசோக்குமார் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக இவர்கள் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் புருஷோத்தமன் மற்றும் அசோக் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலத்த காயமடைந்த புனிதா சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 died in car motorcycle collision in chidambaram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->