சோதனை சாவடியில் கணக்கில் வராத ரூ.2.25 லட்சம் பணம் பறிமுதல்! - Seithipunal
Seithipunal


ஓசூர் உள்வழி சோதனை சாவடியில் கணக்கில் வராத ரூ.2.25 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஓசூர் அருகே உள்ள ஜூஜூவாடியில் கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் வாகனங்களுக்கு நுழைவு சீட்டு பர்மிட் போடப்படும் ஆர்டிஓ சோதனைச்சாவடி உள்ளது.

இந்நிலையில் இன்று காலை உள்வழி சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில்  சோதனை சாவடியில் இருந்த கணக்கில் வராத 2 லட்சத்து 25 ஆயிரத்து 950 ரூபாய் ரொக்க பணம் சிக்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர் நிர்மல் குமார் என்பவர் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் அங்கிருந்து கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தில் பரபரப்பு காணப்பட்டது.

திடீரென சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை செய்ததால் 100க்கு மேற்பட்ட வாகனங்கள் சிறிது நேரம் தாமதமாக சென்றது. பணம் பறிமுதல் செய்யப்பட்ட நேரத்தில் பணியில் இருந்து அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 lakh 25 thousand unaccounted cash seized at the check post


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->