2 கிலோ கஞ்சா பறிமுதல்.. நீலகிரியில் சிக்கிய ஆசாமிகள் ..! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டமானது மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. மேலும் இம்மாவட்டம் கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் பாலமாக உள்ளது. இதைப் பயன்படுத்தி கடத்தல்காரர்கள் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு போதைப்பொருட்களை நீலகிரி வழியாக  கடத்திச் செல்கின்றனர்.

மேலும் தமிழகம் முழுவதும் நீலகிரியில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், நீலகிரியில் காவல் துறையினர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தீவிர ரோந்துப் பணியிலும், சோதனைகளிலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில் கஞ்சா விற்க முயன்றதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து காவல் துறையினரிடம் கேட்டபோது, "குன்னூரில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்ததையடுத்து குன்னூர் காட்டேரி பகுதியில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெலிங்டன் பகுதியைச் சேர்ந்த இம்மானுவேல் பெலிக்ஸ் மற்றும் சுகுமார் ஆகிய 2 பேரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரித்ததில், அவர்கள் இருவரும் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்துள்ளது தெரிய வந்தது. மேலும் இம்மானுவேல் பெலிக்ஸ் ஏற்கனவே வெலிங்டன் காவல் நிலையம் எதிரிலேயே கஞ்சா விற்றதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து இருவரையும் குண்டாசில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்று கூறினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 persons arrested in nilgiri with 2 kg drugs


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->