சிவகாசியில் 20 சதவீதம் குறைந்த பட்டாசு விற்பனை!...வியாபாரிகள் கடும் வேதனை! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் ஏராளமான பட்டாசு தயாரிக்கும் குடோன் செயல்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டின் தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் விருதுநகர் மாவட்டத்தில் 2,500-க்கும் மேற்பட்ட சில்லறை பட்டாசு கடைகள் இயங்கி வருகிறது.

இந்த நிலையில், நடப்பு ஆண்டின் தீபாவளிக்கு வழக்கமாக இருப்பதை விட வாடிக்கையாளர் வருகை குறைவாக உள்ளதாகவும்,  கடைகளில் உள்ள கவுண்டர்கள் வாடிக்கையாளர்கள் இல்லாமல் வெறிச்சோடியுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக சிவகாசியில் கடந்தாண்டை ஒப்பிடுகையில் விட பட்டாசு விற்பனை 20 சதவீதம் விழுக்காடு சரிந்துள்ளதால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதற்கிடையே, பயணச் செலவைக் குறைக்கவும், குறைந்த விலையில் உயர்தர பட்டாசுகளை வாங்கவும், தமிழகத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஆன்லைனில் பட்டாசுகளை ஆர்டர் செய்வதாக கூறும் வியாபாரிகள், சிவகாசியில் சொந்த கடைகளை வைத்திருப்பது போல் நடித்து, ஆன்லைனில் பட்டாசுகளை விற்கும் மோசடியாளர்களுக்கு பல வாடிக்கையாளர்கள் பலியாவதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

எனவே ஆன்லைனின் பட்டாசு விற்பதை முறைப்படுத்த வேண்டும் என்று, அரசுக்கு பட்டாசு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

20 percent less sale of firecrackers in sivakasi traders are suffering


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->