வாரவிடுமுறை எதிரொலி : தமிழகத்தில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பண்டிகை நாட்கள் மட்டுமல்லாமல் வார விடுமுறை நாட்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் இன்று முதல் 28-ந்தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று திருவண்ணாமலை,மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு 260 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை 290 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அதேபோல், சென்னை கோயம்பேட்டில் இருந்து, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் ஆகிய நகரங்களுக்கு இன்றும், நாளையும் தலா 65 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 

மேலும், பெங்களூரு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்றும், www.tnstc.in என்ற மொபைல் செயலி மூலம் பயணிகள் முன்பதிவு செய்து தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

200 special bus run in tamilnadu


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->