வணிக நிறுவனங்களுக்கு ரூ. 2000 அபராதம் - தமிழக அரசு அதிரடி.! - Seithipunal
Seithipunal


வணிக நிறுவனங்களுக்கு ரூ. 2000 அபராதம் - தமிழக அரசு அதிரடி.!

தமிழகத்தில் செயல்படும் வணிக நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பெயர்பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், சில நிறுவனங்கள் இதனைக் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தன.

அதனால், அரசின் இந்த உத்தரவை கண்டிப்புடன் பின்பற்றுமாறு வணிகர்களுக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், "தமிழில் பெயர்ப்பலகை வைக்காவிட்டால் ரூ.50 லிருந்து ரூ.2000 ஆக அபராத தொகையை உயர்த்த தமிழ்நாடு அரசு விரைவில் அரசாணை பிறப்பிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை பதிவு செய்துகொண்ட மதுரை உயர்நீதிமன்ற கிளை, "தமிழில் பெயர்ப்பலகை வைக்காமால் இருக்கும்  எத்தனை நிறுவனங்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2000 fine to comapnies for name board in tamil


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->