2023 ரீவைண்ட்! தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்திய நட்சத்திரங்களின் மரணங்கள்! - Seithipunal
Seithipunal


2023 ஆம் ஆண்டில் தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்திய நட்சத்திரங்களின் மரணங்கள்!

தேமுதிக தலைவரும், நடிகர் சங்க முன்னாள் தலைவருமான நடிகர் விஜயகாந்த் கடந்த 28 ஆம் தேதி உடல்நகுறைவால் மறைந்தார்.

பழம்பெரும் திரைப்பட பின்னணி பாடகி வாணி ஜெயராம் (வயது 77), பிப்.4 அன்று சென்னையில் காலமானார். 

நகைச்சுவை நடிகரும் குணச்சித்திர நடிகருமான மயில்சாமி (வயது 57) பிப்.19 அன்று காலமானார்.

குணச்சித்திர நடிகர், நகைச்சுவை நடிகர், தயாரிப்பாளர் என பல்வேறு துறைகளில் தனி முத்திரை பதித்த இயக்குநர் மனோபாலா (வயது 69) மே 3 அன்று உடல்நலக் குறைவால் காலமானார்.

தென் இந்திய இசைக் கருவிகளை உலக அளவில் பிரபலப்படுத்திய மிருதங்க வித்வானான காரைக்குடி ஆர்.மணி (வயது 77) மே.4 அன்று காலமானார்.

குணச்சித்திர நடிகர் சரத் பாபு (வயது 71), உடல்நலக் குறைவால் மே.22 அன்று காலமானார்.

நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து (வயது 57) மாரடைப்பால் செப். 8 அன்று காலமானார். 

மேலும் நடிகர் போண்டாமணி, ஜூனியர் பாளையா, டிபி கஜேந்திரன், ஆர் எஸ் சிவாஜி, கே விஸ்வநாத், ஈ ராமதாஸ் ஆகிய நட்சத்திரங்களும் 2023 ஆம் ஆண்டில் மறைந்தனர்.

தேசிய அளவில், பிரபல புகைப்படக் கலைஞர் ஜெயராம் (74), கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி (79), புரட்சிகர கவிஞர் கத்தார் (77), இயக்குநர் சித்திக் (69), "இந்தியாவின் கழிப்பறை மனிதர்' பிந்தேஷ்வர் பாடக் (80), "பசுமை புரட்சியின் தந்தை' வேளாண் விஞ்ஞானி எம். எஸ். சுவாமிநாதன் (98), என். சங்கரய்யா (102), ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ். வெங்கடரமணன் (92), உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும் தமிழக முன்னாள் ஆளுநருமான பாத்திமா பீவி (96), ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ் (75) உள்ளிட்டவர்களும் மறைந்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2023 TAMILNADU REWIND


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->