தொடரும் நாய்கடிகள்! 4 லட்சம் பேர் பாதிப்பு! 22 பேர் பலி! வெளியான அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ரேபிஸ் நோய் பாதிப்பால் 22 பேர் உயிரிழந்த உள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் நாய், பாம்பு உள்ளிட்ட உயிரினங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக நாய்கடி சம்பவங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வேதனைக்குரிய உண்மை.

கடந்த 2023 ஆம் ஆண்டு மட்டும் 4 லட்சத்து 41 ஆயிரத்து 84 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு அதில் 18 பேர் ரேபிஸ் நோய் ஏற்பட்டு உயிரிழந்து உள்ளனர். அதேபோல் ஜூன் மாதம் முதல் வர இரண்டு லட்சத்து 42 ஆயிரத்து 782 பேர் நாய் கடித்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் 22 பேர் ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்ட உயிரிழந்துள்ளனர். 

இந்தநிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து சுகாதார நிலையங்களிலும் விலங்குகள் அது ஏற்படக்கூடிய பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக தீவிர நடவடிக்கை சுகாதாரத்துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் வேண்டும் என பொது சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒவ்வொரு ஆரம்ப நிலையங்களில் குறைந்தபட்சம் 20 ஏஆர்வி மருந்து குப்பைகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். நாய் கடித்தால் பாதிக்கப்பட்ட சிகிச்சை அளிக்கப்படும் அனைவருக்கும் ஏஆர்வி மருந்து வழங்க வேண்டும் இதனை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும் முறையாக பின்பற்ற வேண்டும் என பொது சுகாதார துறை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

22 people died due to rabies in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->