ஆர்த்தி ஸ்கேன் சென்டரில் 2வது நாளாக ஐ.டி. சோதனை.! - Seithipunal
Seithipunal


ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். 

ஆர்த்தி ஸ்கேன் நிறுவனம் சென்னையில் கடந்த 2000ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 10 மாநிலங்களில் 40 எம்ஆர்ஐ பிரிவுகளுடன் ஆர்த்தி ஸ்கேன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

உயர்தரம் மற்றும் நம்பகமான மருத்துவம் பகுப்பாய்வு புகைப்படம் எடுத்தல் மையமாகக் கொண்டு இயங்கி வந்த நிலையில், சமீபத்தில்  டாட்டா கேப்பிட்டல் குரூப் ஆர்த்தி ஸ்கேன் சென்டர் நிறுவனத்தில் முதலீடு செய்தது. இந்த சூழ்நிலையில் பல்வேறு மாநிலங்களில் கிளை பரப்பி இயங்கிவரும் ஆர்த்தி ஸ்கேன் சென்டர்  வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. 

இதையடுத்து நேற்று முதல் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 25 ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் தொடர்புடைய மருத்துவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2nd day IT Raid for Aarthi Scans


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->