கடலூர்: கார் கவிழ்ந்து விபத்து.! அய்யப்ப பக்தர்கள் 3 பேர் காயம்.!
3 Ayyappa devotees injured in car overturn accident in Cuddalore
கடலூர் மாவட்டத்தில் டயர் வெடித்து கார் கவிழ்ந்த விபத்தில் மூன்று அய்யப்ப பக்தர்கள் காயமடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பெரியார் நகர் பகுதியில் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது மகன் சரவணன் மற்றும் அவருடைய நண்பரான சென்னையைச் சேர்ந்த வாசுதேவன் ஆகியோர் கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு காரில் சென்றுள்ளனர்.
பின்பு அங்கிருந்து மீண்டும் விருத்தாச்சலம் நோக்கி நேற்று மாலை வந்து கொண்டிருந்தபோது, திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரியநாச்சி பேருந்து நிலையம் அருகே வந்த போது திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்துள்ளது. இதையடுத்து கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியாவை தாண்டி நெடுஞ்சாலை மார்க்க சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணம் செய்த மணிகண்டன் சரவணன் வாசுதேவன் ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மூன்று பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த விபத்து குறித்து வேம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
3 Ayyappa devotees injured in car overturn accident in Cuddalore