3 நாட்களுக்கு தடை.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி நுழைந்த ஒமைக்ரான் வைரஸ் தற்போது வரை 653 பேருக்கு  உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்டா விட வேகமாகப் பரவக்கூடியது என்பதால் இந்த வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று 34 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஒமைக்ரான் தொற்றில் இருந்து 16 பேர் குணமடைந்துள்ளனர். ஒமைக்ரான் பரவல் காரணமாக,  நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும், சென்னையில் பொது இடங்களுக்கு செல்லும்போது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், குற்றாலம் அருவியில் வரும் 31.12.2021 முதல் 2.1.2022 வரை புத்தாண்டை ஒட்டி மூன்று நாட்களுக்கு பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா மற்றும் ஒமைக்ரான் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டி குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகியவற்றில் வருகின்ற 31ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் இரண்டாம் தேதி ஞாயிற்று கிழமை வரை மூன்று நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 days no bathing in coutrallam falls


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->