ஊழலுக்கு எதிரான நடவடிக்கை குறித்து தினமும் 2500 புகார்கள் - விஜிலென்ஸ் ரிப்போர்ட்.! - Seithipunal
Seithipunal


பகவந்த் மான் தலைமையிலான பஞ்சாப் அரசில், ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளின் ஆடியோ அல்லது வீடியோக்களை மக்கள் அனுப்புவதற்கு  கடந்த மார்ச் மாதம் உதவி எண் வழங்கப்பட்டது. 


 
இதனைத் தொடர்ந்து பஞ்சாப் அரசில்  ஊழலுக்கு எதிராக மக்களுக்கு அளிக்கப்பட்ட உதவி எண்ணிலிருந்து வரும் புகார்களை பஞ்சாப் விஜிலென்ஸ் ஆய்வு செய்து வருகிறது. 

மக்களுக்கு வழங்கப்பட்ட உதவி எண்ணில் இருந்து பஞ்சாப் அரசில் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்து இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளது. ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. 

மேலும், ஆளும் ஆம் த்மி கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில், "ஊழலுக்கு எதிரான நடவடிக்கை குறித்து தினமும் 2500 புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது. எங்கள் கனவு ஊழல் இல்லாத பஞ்சாப்" என்று ஆளும் ஆம் த்மி கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 lakh complaints through anti corruption helpline Punjab Govt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->