காரை திருடுவதற்காக நடந்த கொலை.. விசாரணையில் வெளிவந்த உண்மை..! - Seithipunal
Seithipunal


ஓட்டுநரை கொலை செய்த மூவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், ஒட்டியபாக்கம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன். இவர் ஒலா நிறுவனத்தில் ஓட்டுநராக இருந்து வருகிறார். இந்நிலையில், கால் டாக்சி புக் செய்த கும்பல் அவரை கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளையு, செல்போன் தரவுகளையும் ஆய்வு செய்தனர். அதனை வைத்து கரியனூர் கிராமத்தை சேர்ந்த திருமூர்த்தி, பிரசாந்த் , கட்டிமுத்து ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் காரை திருவதற்காக அவரை கொலை செய்ததை ஒப்பு கொண்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 persons arrested Near Chennai Due to Murder a driver


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->