பிரபல ஓட்டலுக்கு 35 ஆயிரம் அபராதம் - ஊறுகாய் வைக்காததால் வந்த வினை.!
35000 fined to popular hotel in vilupuram
விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவர், கடந்த 2022ஆம் ஆண்டு விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே ஒரு ஓட்டலில் 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து 25 பார்சல் சாப்பாடு வாங்கியுள்ளார்.
பதினொரு வகையான உணவுப்பொருட்கள் இருப்பதாகக் கூறி வழங்கப்பட்ட அந்த பார்சல் சாப்பாட்டில், ஊறுகாய் இல்லாததால் ஏமாற்றமடைந்த ஆரோக்கியசாமி, சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.
இதற்கு ஓட்டல் நிர்வாகத்தினர் சரிவர பதில் அளிக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ஆரோக்கியசாமி விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சாப்பாட்டிற்கு ஊறுகாய் வழங்காமல் மனுதாரரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகக் கூறி சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு 35 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஊறுகாய்க்கு உரிய தொகையான 25 ரூபாயும் வழங்க உத்தரவிட்டது.
மேலும், 45 நாட்களுக்குள் பணத்தை செலுத்தாவிட்டால், மாதம் ஒன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் அபராதத் தொகையையும் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
English Summary
35000 fined to popular hotel in vilupuram