பரபரப்பு! தந்தை கண்முன்னே 9 வயது மகளுக்கு நடந்த கொடூரம்!
3rd class student was crushed to death by a lorry tire near Thiruninravur
திருநின்றவூர் அருகே லாரி டயரில் சிக்கி மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆவடியை அடுத்த திருநின்றவூர் தாசார்புரம் பகுதியில் சி.எஸ்.ஐ தேவாலயத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பாதிரியாராக பணிபுரிந்து வருபவர் ஜோஸ். இவர் தேவாலயத்திற்கு உள்ளே இருக்கக்கூடிய வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது மனைவி மலர்விழி திருநின்றவூர் அடுத்த பாக்கம் அருகே காவனூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் ஜோபி கிறிஸ்டில்டா என்ற மகளும் ஜோவின் என்ற மகனும் இருந்துள்ளனர். இவர்களது மகள் ஜோபி திருநின்றவூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று சம்பவத்தன்று பாதிரியார் ஜோஸ் இருசக்கர வாகனத்தில் தனது மகளை பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது சாலையில் வந்து கொண்டிருந்தபோது அவரது இருசக்கர வாகனத்துக்கு முன்னதாக சென்ற கார் திடீரென பிரேக் போட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோஸ் மோட்டார் சைக்கிள் கார் மீது மோதாமல் இருக்க திடீர்னு அவரும் பிரேக் போட்டதால் அப்போது நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்துள்ளனர். அப்போது இவர்கள் இருவருக்கும் பின்னால் வந்த லாரி கீழே விழுந்த ஜோபி கிறிஸ்டில்டவின் தலையின் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜோஸ் எந்தவித காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்தை கண்ட லாரி ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடிதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து போலீசார் உயிரிழந்த சிறுமியின் உடலை மீட்டு பிரதேச பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநரை வலை வீசி தேடி வருகின்றனர். தந்தை கண் முன்னே மூன்றாம் வகுப்பு மாணவி லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
3rd class student was crushed to death by a lorry tire near Thiruninravur