#கோவை || ஓசி சிகரெட் கேட்டு தகராறு... தி.மு.க. கவுன்சிலர் உட்பட 4 பேர் கைது...! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் மளிகை கடையில் ஓசி சிகரெட் கேட்டு தகராறு செய்த தி.மு.க கவுன்சிலர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்கள் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று இவர்களது கடைக்கு வந்த காரமடை பஞ்சாயத்து தி.மு.க கவுன்சிலர் ரவி மற்றும் அவரது நண்பர்களான பார்த்திபன், முருகேசன், துரைசாமி சிகரெட் கேட்டுள்ளனர்.

இதையடுத்து சிகரெட் வாங்கிக் கொண்ட அவர்கள் அதற்கு பணம் தர மறுத்துள்ளனர். இதனால் கடை உரிமையாளர் கணேசனுக்கும், இவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கவுன்சிலர் ரவி, அவரது நண்பர்கள், கணேசன் மற்றும் அவரது மனைவியை தாக்கி, மளிகை கடையையும் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், திமுக கவுன்சிலர் ரவி மற்றும் அவரது நண்பர்களான பார்த்திபன், முருகேசன், துரைசாமி ஆகியோரை கைது செய்தனர் பின்பு இவர்கள் நீதிமன்றத்தில் ஆசைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 including a DMK councilor were arrested for arguing over free cigarettes in kovai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->