தொடரும் கள்ளச்சாராயம் : சேலம் மாவட்ட எல்லையில் கள்ளச்சாராயம் விற்ற 4 பேர் கைது! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்ட எல்லையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த 4 பேரை காவல்துறை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அளவைவிட அதிகமாக கலக்கப்பட்ட மெத்தனால் கள்ளச்சாராயத்தை குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆளும் திமுக கட்சியின் அலட்சியத்தை கண்டித்து கண்டன அறிக்கைகள்  விடுத்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி கள்ளசாராய விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், சேலம் சரக டிஐஜி உமா மற்றும் சேலம் மாவட்ட போலீஸ் சுப்ரண்ட் அருண் கபிலன் ஆகியோர் தீவிர கள்ளச்சாராய வேட்டை நடத்த காவல்துறையினருக்கு உத்தரவிட்டு உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சேலம் மாவட்ட எல்லை தலைவாசல் பகுதியில் போலீசார் தீவிர கள்ளச்சாராய சோதனை நடத்தி வந்தனர். சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட ராமசேஷபுரம், சிறுவாச்சூர், மணிவிழுந்தான் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வருவதாக தலைவாசல் காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், கலாச்சாராயத்தை விற்பனை செய்து கொண்டிருந்த சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த பால்ராஜ், ராமசாமி மற்றும் காமக்காபாளையம் பகுதியைச் சேர்ந்த பெரியம்மாள் வடகுமறைப்பகுதியை சேர்ந்த சிவகாமி ஆகிய 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சுமார் 50 லிட்டர் பாக்கி சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை காவல்துறை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 people were arrested for selling bootleg liquor in Salem district border


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->