கெதறல்லா ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 4 பெண்கள்..!! 2வது நாளாக தொடந்த தேடுதல் பணியில் சடலமாக மீட்பு..!! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே மசினகுடி அடுத்த ஆனைக்கட்டியில் அமைந்துள்ள ஆணிக்கல் மாரியம்மன் கோவில் கார்த்திகை மாத பூஜை நேற்று நடைபெற்றது. இந்த பூஜையில் எப்பநாடு, கடநாடு, சின்ன குன்னூர் மற்றும் தேக்கடி பகுதிகளை சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். 

இவர்கள் அனைவரும் கோயிலுக்கு செல்ல கெதறல்லா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஐனிஸ் தரைப்பாளத்தை கடந்து சென்றனர். கோவிலின் பூஜைகள் மாலை 6:30 மணிக்கு முடிந்த பின் வீடு திரும்பும் பொழுது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனை பொருட்படுத்தாத பக்தர்கள் தரைபாலத்தைக் கடந்து வந்துள்ளனர். 

அந்த சமயத்தில் தரை பாலத்தை கடக்க முயன்ற சரோஜா, வாசுகி, விமலா, சுசிலா ஆகியோர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனை அடுத்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் கிராம மக்கள் உதவியுடன் இரவு 12 மணி வரை நான்கு பேரையும் தீவிரமாக தேடி வந்தனர். நள்ளிரவு நேரம் என்பதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டு இன்று காலை மீண்டும் தொடங்கினர். இந்த நிலையில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 women swept away in Kedaralla river at nilagiri


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->