4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. 2 வட மாநில தொழிலாளர்கள் கைது.!
4 year old girl sexually abused 2 Northern State workers arrested
சென்னை எண்ணூரில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வடமாநிலத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை எண்ணூர் பகுதியில் குடியிருப்போர் கட்டிட பணிக்காக வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளிகள் பலர் அங்கேயே தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு வேலை பார்த்து வந்த வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளிகளுடன் தங்கியிருந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு வேலை பார்த்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளிகள் இருவரையும் கைது செய்து சென்னை திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
4 year old girl sexually abused 2 Northern State workers arrested