ஆம்னி பேருந்தில் சிக்கிய 40 லட்சம் ஹவாலா பணம் - கடலூரில் பரபரப்பு.!!
40 lakhs hawala money seized in cudalore
கடலூர் அருகே ஆம்னி பேருந்தில் 40 லட்சம் ஹவாலா பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து கடலூர் மாவட்டம் மன்னார்குடிக்கு நேற்று இரவு ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து இன்று காலை, கடலூரை கடக்க முயன்றபோது, ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பேருந்தை மடக்கி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, ஒரு பயணியின் பையில் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட ரூ.40 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது. இதனை பரிமுதல் செய்த போலீசார் பணம் குறித்து, அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் அந்த வாலிபரின் பெயர் நவீன் அன்வர் என்பது தெரியவந்தது. தீவிர விசாரணைக்கு பிறகே, அது யாருடைய பணம்?, எங்கு கொண்டு செல்லப்படுகிறது? என்ற விவரம் தெரியவரும். இந்தச் சம்பவத்தால் அந்த பேருந்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
40 lakhs hawala money seized in cudalore