அதிரடி காட்டும் அதிகாரிகள் - ஒரே நாளில் 45 கிலோ சிக்கன் அழிப்பு.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் சவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கைலாஷ் குமார் தலைமையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், கடலூர் மாவட்ட பேருந்து நிலையத்தில் உள்ள உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது, மூன்று உணவகங்களில், முதல் நாள் சமைத்த கோழி இறைச்சியில், மீதமிருந்த ஐந்து கிலோ இறைச்சியை, அடுத்த நாள் விற்பனை செய்வதற்காக குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அந்த கோழி இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர். இதே போன்று செயற்கை நிறமூட்டி கலந்து சமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 40 கிலோ கோழி இறைச்சியையும் பறிமுதல் செய்து அழித்தனர். 

இதைத் தொடர்ந்து அதிகாரிகள் மூன்று கடைகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதுடன், தலா இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர். மேலும், மக்களுக்கு ஆரோக்கியமான செயற்கை வண்ணங்கள் இல்லாத உணவு வகைகளை தயாரித்து வழங்க வேண்டும் என்றும், உணவு பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காத கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

45 kg chicken seized in cuddalore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->