கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி டாக்டர்கள் பலி!!
5 trainee doctors were killed in the sea wave
மருத்துவ படிப்பை முடித்துவிட்டு திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்த வந்த நாகர்கோவிலை சேர்ந்த சர்வதர்ஷித் திண்டுக்கல்லை சேர்ந்த காயத்ரி, சாருகவி, பிரவீன், வெங்கடேஷ் உள்ளிட்ட 6 பெரும் காரில் திருமண நிகழ்ச்சியில் பங்குகொள்வதற்க்காக நாகர்கோவில் வந்துள்ளனர்.
இரவு முழுவதும் திருமண நிகழ்ச்சில் இருந்துவிட்டு இன்று காலை திற்பரப்பு அருவிக்கு சென்றுள்ளனர்.திற்பரப்பு அருவியில் தண்ணீர் குறைவான அளவில் கொட்டியதால் , அவர் ஆறுபேரும் ராஜாக்கமங்களம் அருகே உள்ள லெமூர் கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளனர். கடல் நீர்மட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 6 போரையும் ராட்சச அலை இழுத்து சேர்த்துள்ளது. அவர்களை அருகில் இருந்தவர் காப்பாற்ற முயன்றுள்ளனர்.
2 பேரை மீட்டனர் 4 பேரை அவர்களால் மிட்க முடியவில்லை . 4 பேரின் உடலும் பிணமாக கரை ஒதுங்கியது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் பரிதமாக உயிர் இழந்த்துள்ளனர். சுற்றுலா வந்த 5 பயிற்சி டாக்டர் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
English Summary
5 trainee doctors were killed in the sea wave