விழுப்புரத்தில் பரபரப்பு! சாராயத்தை குடித்து 6 பேர் மயக்கம்!
6 people fainted after drinking alcohol near Villupuram
விழுப்புரம் அருகே சாராயத்தை குடித்து 6 பேர் மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 66 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பாப்பரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் காவல்துறை மற்றும் மதுவிலக்கு அமலாக்கத்துறை கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரம் அருகே வேம்பி மதுராபூரிகுடிசை கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்.கூலித்தொழிலாளியான நேற்று மாலை புதுச்சேரி மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் சாராய பாக்கெட்டுகளை வாங்கி வந்துள்ளார். பின்னர் அவர் அதை ஊரை சேர்ந்த ராஜா, சுரேஷ்பாபு, பிரகாஷ், காளிங்கராஜா, பிரபு ஆகியோருடன் சேர்ந்து சாராயத்தை குடித்துவிட்டு அவரவர் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு இரவு சாராயம் குடித்த சக்திவேல் உள்ளிட்ட 6 பேருக்கு வயிற்று வலி ஏற்பட்டு அடுத்தடுத்து மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் பதறிய குடும்பத்தினர் உறவினர்கள் 6 பேரையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவர்கள் 6 பேருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்
இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி கசாராயத்தை வாங்கி வந்து குடித்த 6 பேர் திடீரென உடல் நலம் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
English Summary
6 people fainted after drinking alcohol near Villupuram