இலங்கை சிறையில் இருந்து 6 தமிழக மீனவர்கள் விடுதலை.! நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


இலங்கை சிறையில் உள்ள 6 மீனவர்களையும் விடுதலை செய்து மன்னார் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 21 ஆம் தேதி 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் தனுஷ்கோடி, தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 6 மீனவர்களை கைது செய்தனர். அவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு 6 பேரையும் அழைத்து சென்று விசாரணை செய்து, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை ஆகஸ்ட் 4-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து 6 மீனவர்களும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், சிறைக்காவல் முடிந்து ஆஜர்படுத்தப்பட்ட 6 மீனவர்களையும் விடுதலை செய்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்ட 6 மீனவர்களும் மீண்டும் எல்லைதாண்டி மீன்பிடித்தால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

6 tamilnadu fisherman released srilankan coastal guard


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->