டன் கணக்கில் குப்பை - பிரதமர் கேள்விக்கு அண்ணாமலை பதில்
7 ton garbage cleaned annamalai answered to pm modi
பிரதமர் நரேந்திர மோடி எந்த ஊருக்கு சென்றாலும் அந்த பகுதியில் இருக்கும் குப்பைகளை அகற்றி நாம் அவரை வரவேற்க வேண்டும் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில செயற்குழு கூட்டம் திருச்சி பால்பண்ணை பகுதியில் 2.1.2024 செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநில இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா, காந்தி, நயினார் நாகேந்திரன், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், பல்வேறு அணிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அண்ணாமலை பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி தான் பங்கேற்கும் ஆண்டின் முதல் விழா தமிழகத்தில்தான் நடைபெற வேண்டும் என விரும்பினார். அதுபோலவே, திருச்சியில் தற்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார் .
திருச்சிக்கு வருகை தந்த பிரதமர் என்னிடம் திடீரென்று எவ்வளவு குப்பைகளை அகற்றினீர்கள் எனக் கேட்டார். அதற்கு நான், 7 டன் குப்பைகளை அகற்றியுள்ளோம் என பதில் அளித்தேன், அந்த அளவுக்கு எப்போதும் நமது பிரதமர் நாட்டின் தூய்மையைப் பற்றியே சிந்தித்து வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி எந்த ஊர் சென்றாலும் அப்பகுதிக்குயில் உள்ள அங்கு குப்பைகளை அகற்றி நாம் அவரை வரவேற்க வேண்டும் என்றார்.
English Summary
7 ton garbage cleaned annamalai answered to pm modi