70% பஸ்கள் ஓடவில்லை.!! தவிக்கும் பொதுமக்கள்.. போராடும் தொழிலாளர்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழக முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் சில மாவட்டங்களில் குறைந்த அளவே அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக திருவாரூர், கள்ளக்குறிச்சி, மாவட்டங்களில் வெறும் 30% பேருந்துகள் மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருகிறது. அதே போன்று கடலூர் மாவட்டத்தில் 30% பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிறைவு வருகிறது.

அதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40% பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் மின்சார ரயிலை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதே நிலை பல மாவட்டங்களில் நீடித்து வருவதால் பொதுமக்களின் கூட்டம் பேருந்து நிலையங்களில் அலை மோதுகிறது. அதே போன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் 30% பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக திருச்சியில் 60% பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. மேலும் மதுரை, விழுப்புரம், கடலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 50 முதல் 70% பேருந்துகள் மட்டுமே இயங்கும் நிலையில்  அரசு போக்குவரத்து துறை பணிமனைகள் முன்பு போக்குவரத்து துறை தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பணிமனைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

70 percentage buses are not running in some district


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->