விற்பனைக்காக புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் விற்பனைக்காக 700 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் ஆண்டிபாளையம் திருப்பூர்-தாராபுரம் சாலை பகுதியில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக அவினாசிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து தனிப்படை போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டதில், விற்பனைக்காக 700 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த திருச்செங்கோட்டை சேர்ந்த முருகன் ( 42 ), சுரேஷ்குமார்( 44 ) ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

700 kg of tobacco products seized in Tiruppur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->