பரபரப்பு! சட்னியில் இறந்து கிடந்த பல்லி! 8 பேர் மருத்துவமனையில் அனுமதி! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூரில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பட்டாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் உடல் நலக்குறைவால் சமயத்தில் காலமானார். அவரின் தூக்கம் நிகழ்ச்சிக்கு உறவினர்கள் வந்துள்ளனர். அவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கடையில் இட்லி வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதை சுபாஷ் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உட்பட 3 குழந்தை சாப்பிட்டு உள்ளனர். அப்போது திடீரென ஒரு குழந்தை வாந்தி ஏற்பட்டுள்ளது. உடனடியாக சுபாஷ் வாங்கி வந்த இட்லியை பார்த்தபோது சட்னியில் பல்லி இறந்து கிடந்தது தெரிய வந்தது அடுத்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து உடனடியாக இட்லி சாப்பிட்ட 8 பேரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உணவகத்தில் வைக்கப்பட்ட சட்னியில் பல்லி இருந்து கூறி அதை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அந்த உணவகத்தை ஆய்வு செய்து ரூ.2000 அபராதம் விதித்தன. மேலும் நான்கு நாட்களுக்கு கடையை திறக்க கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

8 people admitted to hospital after eating lizard food in Tirupattur


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->