8 வாகனங்கள் மீது கிரானைட் லாரி மோதி விபத்து! ஒருவர் பலி! - Seithipunal
Seithipunal


ஓசூர் அருகே கிரானைட் லாரி  முன்னால் சென்ற 8 வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது!

ஓசூர் அருகேயுள்ள சானமாவு பகுதியில், ஓசூர்-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில் அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டு, அனைத்து வாகனங்களும் நின்று நிதானமாக செல்கின்றன.

இந்த நிலையில், ஓசூரிலிருந்து நேற்று மதியம் கிருஷ்ணகிரி நோக்கி,கிரானைட் கல் ஏற்றிய லாரி அதிவேகமாக வந்துகொண்டிருந்தது. திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னால் மெதுவாகச் சென்ற 4 கார்கள், கன்டெய்னர் லாரி உள்ளிட்ட 3 லாரிகள் மற்றும் அரசுப் பேருந்து மீது மோதியது. இதில் இரு கார்கள் முற்றிலும் சேதமடைந்தன.

இந்த விபத்தில் பெங்களூரிலிருந்து - கோவைக்கு ஒரே காரில் வந்த கோவையைச் சேர்ந்த ஆயில் மில் தொழிலதிபர் வெங்கடேஷ் (33), அரவிந்த் (30), தஞ்சாவூர் துரை (24), பழநி கார்த்திக் ராஜா (36), மற்றொரு காரில் வந்த கிருஷ்ணகிரி ஓட்டுநர் ரவி (45), வேல்விழி (67), அவரது மகன் பூபேஷ் (35) உள்ளிட்ட 8 பேர் பலத்த காயமடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு, ஓசூர்,கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.. இதில் கார் ஓட்டுநர் ரவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பலத்த காயமடைந்த வேல்விழி, துரை ஆகியோருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.

 இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

8 vehicles collided with a granite truck accident One victim


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->