பேருந்து பயணிகளுக்கு குட் நியூஸ்! வார இறுதி நாட்களில் 945 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
945 special buses run on weekends
சென்னை : பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக வார இறுதி நாளான வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 945 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. நாள்தோறும் மக்கள் அலுவலகம், வீடு போன்ற இடங்களுக்கு செல்வதற்கு பேருந்து, ரயில், மெட்ரோ போன்ற போக்குவரத்துகளை பயன்படுத்துகின்றனர். இதனால் வார இறுதி நாட்களில் பேருந்துகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் வார விடுமுறை தினங்களான வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்வதற்கு சென்னையில் இருந்து தினசரி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளுக்கு நாளை 265 பேருந்துகளும் சனிக்கிழமை 325 பேருந்துகளும் இயக்கப்படும்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் 65 பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்வதற்காக 200 கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டடுள்ளது.
பேருந்துகளில் கூட்ட நேரிசையை தவிர்ப்பதற்காக 945 சிறப்பு பேருந்துகளை இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
English Summary
945 special buses run on weekends