சென்னையில் 960 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் - போலீசார் அதிரடி..!
960 kilo red wood seized in chennai
சென்னையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 960 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடி அருகே செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் படி, போலீசார் சம்பவ இடத்தில் நடத்திய சோதனையில், வீட்டில் 960 கிலோ செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து, முகமது ரசூல் என்பவரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஆந்திரா மாநிலத்தில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் இந்த சம்பத்தில் தொடர்புடைய நபர்கள் யார்? எதற்காக கடத்தப்பட்டது என்ற பின்னணி குறித்து பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
English Summary
960 kilo red wood seized in chennai