சென்னை ஒரகடத்தில் நாய் கடித்து 13 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு..! - Seithipunal
Seithipunal


சென்னை அருகே ஒரகடம் வடக்குப்பட்டு கிராமம், புதிய காலனி பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர். இவருடைய மகன் விஸ்வா 13 வயது. இவர் 08-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். .கடந்த 7ம்தேதி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த போது விஷ்வாவை தெரு நாய் ஒன்று வலது கையில் கடித்துள்ளது.

உடனடியாக அவரை  ரெட்டிப்பாளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று விஷ்வா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  இதுகுறித்து ஒரகடம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர். 13 வயது சிறுவன் நாய் கடித்து இறந்துள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A 13 year old boy dies tragically after being bitten by a dog in Oragadam Chennai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->