பணம் சம்பாதிக்கும் குறிக்கோளுடன் சுங்கச்சாவடிகள்; உயர் நீதிமன்றம் அதிருப்தி..!
Toll booths with the aim of making money; High Court dissatisfied
பணம் சம்பாதிக்கும் குறிக்கோளுடன், காளான்கள் போல சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுவதாக ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், டில்லி-அமிர்தசரஸ்-கத்ரா விரைவுச் சாலை பணிகள் நடந்து வருகிறது. இந்த விரைவு சாலையுடன் இணைக்கும் ஜம்மு-பதன் கோட் நெடுஞ்சாலையில் லகான்பூர், பான் இடையே சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இவ்வாறு சுங்கச்சாவடிகள் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்யக்கோரி ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிமன்ற விசாணைக்கு வந்தது. மக்களிடம் இருந்து பணம் சம்பாதிக்கும் ஒரே குறிக்கோளுடன் காளான்கள் போல சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. சுங்கச்சாவடி கட்டணங்களால் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மட்டுமல்லாமல், தனியார் ஒப்பந்ததாரர்களும் கோடிக்கணக்கில் பணம் குவித்து, தங்களை வளமாக்கிக் கொள்கின்றனர் என நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், மக்களிடம் பணம் வசூலிப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்து செயல்படக் கூடாது. சுங்கக் கட்டணங்கள் நியாயமானதாக இருக்க வேண்டும். நான்கு மாதங்களுக்குள் இது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஜம்மு- காஷ்மீரில் லகான்பூர், பான் சுங்கச்சாவடிகளில் கடந்த 2024, ஜனவரி 26-க்கு முன் இருந்த கட்டணத்தில் 20 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. எந்த சார்பும் இல்லாத சுயமான ஆய்வாளரைக் கொண்டு சுங்கக்கட்டணங்களை ஆய்வு செய்ய வேண்டும். ஜம்மு-காஷ்மீரில் 60 கி.மீ., இடைவெளிக்குள் சுங்கச்சாவடிகள் இருக்கக் கூடாது எனவும் அறிவித்துள்ளது.
அப்படி ஏதேனும் இருந்தால், இரண்டு மாதங்களுக்குள் கூடுதல் சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும் என்றும், குற்றப் பின்னணி உடையவர்களை சுங்கச்சாவடி ஊழியர்களாக நியமிக்கக் கூடாத எனவும் நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றம் அளித்த இந்த உத்தரவைத் தொடர்ந்து, வைஷ்ணோ தேவி கோவில் உள்ளிட்ட ஜம்மு-காஷ்மீரில் உள்ள புனித தலங்களுக்கு செல்லும் பக்தர்கள் பயன் அடைவர் என கூறப்படுகிறது.
English Summary
Toll booths with the aim of making money; High Court dissatisfied