பெற்றோர்களே கவனம்! ஊஞ்சல் விளையாடிக்கொண்டிருந்தபோது துணி கழுத்தை இறுக்கி சிறுவன் பலி!!
A boy died after his neck was strangled by cloth while playing on the swing
கொருக்குப்பேட்டை பகுதியில் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஊஞ்சல் துணி கழுத்தை இறுக்கியதில் சிறுவன் பரிந்தபமாக உயிர் என்று சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொருக்குப்பேட்டை ரங்கராஜபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பாபு. அவருடைய மகன் திவாகர் (12). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் குழந்தைக்காக கட்டியிருந்த ஊஞ்சல் துணியில் சிறுவன் தீவாகர் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது வீட்டில் இருந்தவர்கள் வெளியே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது வெகுநேரமாகியும் திவாகர் வீட்டிலிருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது ஊஞ்சல் துணியில் சிறுவன் கழுத்து இறுக்கி வாயில் நுரையுடன் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுவன் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதனை அறிந்த பெற்றோர் கதறி அழுத சம்பவம் காண்போரே கண் கலக செய்தது. இது குறித்து தகவல் அறிந்து கொருக்குப்பேட்டை போலீஸ்சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த கொருக்குப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர்களின் அஜாகிரதையால் சிறுவன் ஊஞ்சல் துளிகள் கழுத்து இறுகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திவுள்ளது.
English Summary
A boy died after his neck was strangled by cloth while playing on the swing