விழுப்புரம் பள்ளி மாணவியை எரித்துக் கொன்ற வழக்கு! முன்னாள் அதிமுக புள்ளிகளுக்கு ஆயுள் தண்டனை! - Seithipunal
Seithipunal


கடந்த 2020 ஆம் ஆண்டு சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு நேற்று தீர்ப்பளித்துள்ளது விழுப்புரம் மகளிர் நீதிமன்றம்.

விழுப்புரம் மாவட்டம், சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ (வயது 15). இவர் கடந்த 2020, மே 9 அன்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, வீட்டிலிருந்து புகை வந்ததை கண்ட, அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது, சிறுமியின் உடல் முழுவதும் எரிந்த நிலையில் கதறிக் கொண்டிருந்தார்.

அருகில் உள்ளவர்கள் அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவமனைக்கு சென்ற விழுப்புரம் நீதிபதியிடம் சிறுமி அளித்த வாக்குமூலத்தின் மூலம், அதிமுக முன்னாள் கவுன்சிலரின் கணவர் முருகன் (எ) முருகையன் (வயது 51) மற்றும் அதிமுக கிளைச் செயலர் யாசகம் (எ) கலியபெருமாள் (வயது 60) ஆகிய இருவரும் முன் விரோதத்தின் காரணமாக சிறுமியை எரித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி மறுநாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கானது விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹெர்மிஸ் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் ஆயுள் தண்டனையும், 85 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A case of burning a girl to death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->