திண்டிவனம் மற்றும் கிருஷ்ணகிரி இடையே நான்கு வழிச் சாலை அமைக்க வேண்டும்.. செல்வகணபதி, M.P., கோரிக்கை!
A four-lane road should be constructed between Tindivanam and Krishnagiri. Selvaganapathy M.P.Request!
பெங்களூருவை இணைக்கும் திண்டிவனம் மற்றும் கிருஷ்ணகிரி இடையே நான்கு வழிச் சாலை அமைக்க வேண்டும் என நேற்று மாநிலங்களவையில் செல்வகணபதி, M.P., கோரிக்கை வைத்தார்.
நேற்று மாநிலங்களவையில் செல்வகணபதி, M.P. பேசியதாவது :இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு இடையே சிறந்த சாலை இணைப்பை ஏற்படுத்தியதற்காக மாண்புமிகு மத்திய நெடுஞ்சாலை அமைச்சரை நான் பாராட்டுகிறேன். சென்னையிலிருந்து பெங்களூரு வரையிலான 258 கி.மீ தூர தேசிய விரைவுச் சாலை NE-7 திட்டத்தின் ஒரு பகுதி, 2.5 மணி நேர பயணம் செய்யும் வகையில் சாதனை படைக்க உள்ளது. மொத்த திட்டச் செலவு ரூ.18000 கோடியில், இந்தத் திட்டம் விரைவில் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இது மிகவும் பாராட்டுக்குரியது.
இந்த நெடுஞ்சாலையில் உள்ள கிருஷ்ணகிரி, கடலூர் - புதுச்சேரி பெங்களூருக்கும் இடையிலான முக்கியமான் இணைப்பாகும். தற்போது கிருஷ்ணகிரியிலிருந்து ஓசூர் வழியாக பெங்களூருக்கு ஆறு வழிச் சாலை இணைபாக உள்ளது. கடலூரிலிருந்து புதுச்சேரி வழியாக கிருஷ்ணகிரிக்கு செல்லும் 187 கி.மீ சாலையான் தேசிய நெடுஞ்சாலை-NH-66, இரண்டு வழிச் சாலையாகும். இந்த இருவழிச் சாலையை முடிக்க கூட, 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தச் சாலையில் உள்ள திருவண்ணாமலை மிகவும் புகழ் பெற்ற புனித யாத்திரை மையமாகும். இரவு நேரங்களில் பல விபத்துகள் நடக்கின்றன. ஏனெனில் ஏராளமான பயணிகள் வாகனங்கள், பேருந்துகள் மற்றும் லாரிகள் பெங்களூருவிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக புதுச்சேரிக்கு மக்களையும் சரக்கு போக்குவரத்தையும் கொண்டு செல்ல இந்த சாலையைப் பயன்படுத்துகின்றன. . புதுச்சேரி பிரெஞ்சுக் கலாச்சார மையம் மட்டுமின்றி சாகர்மாலா திட்டத்தின் கீழ் ஒரு துறைமுகத்தை அமைக்கவும் இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அது பிரபலமான சுற்றுலாத் தலமாகவும் இருப்பதால், பெங்களூரு, மைசூருமட்டுமின்றி தமிழகத்தின் பல இடங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரியை அடைந்து வசதியாகவும் பாதுகாப்பாகவும் திரும்பிச் செல்வதில் மிகவும் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக வார இறுதி நாட்களில், திண்டிவனம் மற்றும் கிருஷ்ணகிரி இடையேயான முழு சாலையும் சுற்றுலா வாகனங்கள் மற்றும் வார இறுதியை அனுபவிக்க புதுச்சேரியை அடையும் ஆம்னி பேருந்துகளால் நிரம்பி வழிகிறது. இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
புதுச்சேரியிலிருந்து பெங்களூரு மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சரக்கு போக்குவரத்திற்கும் பயன்படுகிறது. இந்தப் பின்னணியில், சாலை இணைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை. ஆகவே, போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, இப்போதைய சாலையில் சமாளிப்பது முற்றிலும் சாத்தியமற்றது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரே தீர்வு, திண்டிவனத்திலிருந்து கிருஷ்ணகிரி வரையிலான இருவழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றுவதுதான்.
ஆகவே, திண்டிவனத்திலிருந்து கிருஷ்ணகிரி வரை நான்கு வழிச் சாலையால் இணைக்கப்படவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இந்த நான்கு வழிச் சாலை அமைக்க அரசு முன்பே திட்டமிட்டி, அது மிகவும் நிறைவேறாமல் போய்விட்டது. அந்தச் சாலையில் ஏராளமான ரியல் எஸ்டேட் வீட்டு மனைகள் வருவதை என்னால் பார்க்க முடிந்தது. இந்தச் சாலைத் திட்டத்தின் விரிவாக்கம் இப்போது திட்டமிடப்படாவிட்டால், 187 கி.மீ நீளமுள்ள வீட்டு மனைகளின் நெரிசல் காரணமாக, எதிர்காலத்தில் விரிவாக்கம் செய்வது மிகவும் கடினமாகிவிடும்.எனவே, திண்டிவனத்திலிருந்து கிருஷ்ணகிரி வரையிலான இருவழிப் பாதையை நான்கு வழிச் சாலையாக மாற்றுவதற்கு மாண்புமிகு மத்திய நெடுஞ்சாலை அமைச்சர் அவர்கள் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என நேற்று மாநிலங்களவையில் செல்வகணபதி, M.P., கோரிக்கை வைத்தார்..
English Summary
A four-lane road should be constructed between Tindivanam and Krishnagiri. Selvaganapathy M.P.Request!