தள்ளாடும் வயதில்.. "தளராத நம்பிக்கையுடன்" போராடும்... சுதந்திர போராட்ட தியாகி... ஆசை நிறைவேற்றப்படுமா.?
A freedom fighter martyr who fought in Vedasandur taluk office
சுதந்திரப் போராட்டத் தியாகியான கிருஷ்ணசாமி என்பவர், குடியிருக்க சொந்த வீடு கோரி வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்க வந்துள்ளார். ஆனால் அவர் வழக்கம் போல அலட்சியப்படுத்தப்பட்டு விரட்டியுடித்துள்ளனர். இதனால் சுதந்திரப் போராட்ட தியாகியான கிருஷ்ணசாமி வேடசந்தூர் தாலுகா அலுவலகத்திலேயே உண்ணாவிரதம் இருந்துள்ளார். இந்த தள்ளாத வயதிலும் தேசிய கொடியுடன் தலையில் காந்திக்கு குல்லாவுடன் அமர்ந்திருந்துள்ளார்.
ஆனால் யாரும் அவரை கண்டு கொள்ளவில்லை. ஒரு காலத்தில் நாட்டையே ஆங்கிலேயர்களிடமிருந்து மீட்க போராடிய தியாகிகளின் ஒருவரான கிருஷ்ணசாமி, சாவதற்கு முன், தன் நாட்டில் சொந்த வீட்டில் வாழ்ந்து விட்டேன் என்ற நிம்மதியை அடைய வேண்டும் என்பதுதான் இவரது கடைசி ஆசையாம். ஆனால் பல ஆண்டுகளாக பல மனுக்கள் எழுதி, பல அதிகாரிகளை சந்தித்தும் அவரது கோரிக்கை நிறைவேறவில்லை.
மேலும், "நாட்டையே மீட்டு தந்தோமே எங்களுக்கு ஒரு வீடு தந்தா குறைஞ்சா போவீங்க" என்று தள்ளாத வயதில் தேசியக்கொடியுடன் தளராத நம்பிக்கையில் கேள்வி எழுப்புகிறார் கிருஷ்ணசாமி. இவரது ஆசை நிறைவேற்றப்படுமா?
English Summary
A freedom fighter martyr who fought in Vedasandur taluk office