9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு!
A learning opportunity for 9th graders
இஸ்ரோவின் இளம் விஞ்ஞானிகள் திட்டம் - 2025
இஸ்ரோவின் இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் பிப்ரவரி 20 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 9-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களுக்காக "இளம் விஞ்ஞானிகள் திட்டம்" என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 2 வார கால வகுப்பறை பயிற்சி, ரோபோடிக் கிட், இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் மாதிரி ராக்கெட் கலந்துரையாடல் மற்றும் கள ஆய்வு இன்னும் பல பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
இந்த திட்டம் கடந்த 3 ஆண்டுகளில், முதல் ஆண்டில் 111 மாணவர்கள், இரண்டாம் ஆண்டில் 153 மாணவர்கள் மற்றும் 3வது ஆண்டில் 337 மாணவர்களுடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.இந்த திட்டத்தில் கடந்த 2024 ம் ஆண்டு நாடு முழுவதிலும் இருந்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், வகுப்பறை விரிவுரைகள், ரோபாட்டிக்ஸ் சவால், ராக்கெட், செயற்கைகோள்களின் வடிவமைப்பு, தொழில்நுட்ப வசதி வருகைகள் மற்றும் விண்வெளி விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் ஆகியவை இந்தப் பாடத்திட்டத்தில் அடங்கும்.

மாணவர்களின் இருப்பிடங்களின் அடிப்படையில் 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இஸ்ரோவின் VSSC, URSC, SAC, NRSC, NESAC, SDSC SHAR & IIRS மையங்களில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்
இந்தாண்டிற்கான, இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் சேர பிப்ரவரி 20 முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
*https://jigyasa.iirs.go
English Summary
A learning opportunity for 9th graders