அந்த விஷயத்துல அவரு கொஞ்சம் அப்படிதான்" விஜய் மனைவி சங்கீதாவின் சுவாரஸ்ய உரையாடல்.! - Seithipunal
Seithipunal


சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் தளபதி விஜய். ஜனவரி பதினொன்றாம் தேதி அன்று இவரது நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம்  வணிக ரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

இந்நிலையில் தளபதி தனது 67 வது  படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். லியோ என்று பெயரிடப்பட்ட அந்த திரைப்படம் தற்போது விறுவிறுப்பாக  படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்புதான் காஷ்மீரில் சூட்டிங் முடித்துவிட்டு திரும்பி இருக்கிறது படக்குழு.

சமூக வலைதளங்களில் தற்போது  தளபதி விஜயின் பழைய காணொளி ஒன்று வலம் வருகிறது. அதனை ரசிகர்களும் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். அந்த வீடியோவில் தனது மனைவி சங்கீதாவை அறிமுகப்படுத்துகிறார். அதன் பின்னர் ஹாட் பாக்ஸை திறந்து பார்த்தபோது  அதில் இட்லி இருக்கவே, எனக்கு தோசை சாப்பிடணும் போல இருக்கு என கூறுகிறார்.

மனைவி சங்கீதா நான் வேண்டுமானால் தோசை சுட்டு தரவா? என கேட்கிறார். அதற்கு தளபதி நானே சுட்டுக் கொள்கிறேன் என பதில் கூறுகிறார். அந்த வீடியோவில் பேசும்  விஜயின் மனைவி சங்கீதா அவருக்கு தோசை என்றால் ரொம்ப பிடிக்கும். பிரியாணி மிகவும் விரும்பி சாப்பிடுவார். நாளை மதியம் பிரியாணி என்றால் இப்போதே வயிற்றை காலியாக வைத்திருப்பார் என நகைச்சுவையுடன் கூறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காகி கொண்டு இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a lovely and funny conversation between vijay and his wife sangeetha


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->