"தலைமைச் செயலாளரே நம்ம ஆளு தான்" அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி இளைஞர்களிடம் மோசடி! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் முத்திரை தலைமைச் செயலாளர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளின் போலியான கையெழுத்துக்கள் ஆகியவற்றை பயன்படுத்தி கிராமப்புறத்தில் படித்த இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களிடம் பண மோசடி செய்த நபரை கைது செய்ய கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர். இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்டச் செயலாளர் கவிவர்மன் தலைமை ஏற்று வழி நடத்தினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் திம்ம சமுத்திரம் திவ்யா நகரைச் சார்ந்தவர் ஆரோன். இவரது மகன் பிரான்சிஸ் ஜெரால்ட் என்ற சசிகுமார் வயது 35. இவர் தமிழ்நாடு முழுவதும் போலியான பணி நியமன ஆணைகளை வழங்கி ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்து இருக்கிறார்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகாரளித்தும் நடவடிக்கைகள் எடுக்க தாமதமாவதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் கவிவர்மன் தலைமையில்  பாதிக்கப்பட்டவர்கள் இன்று புகார் அளித்துள்ளனர். இவர் புதுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் இளைஞர்களிடமும் இளம் பெண்களிடமும் தனக்கு தலைமைச் செயலாளரை தெரியும் அதன் மூலம் அரசு பணி வாங்கித் தருகிறேன் எனக் கூறி போலியான  தமிழக அரசு முத்திரை மற்றும் தலைமைச் செயலாளர், ஐஏஎஸ் அதிகாரிகளின் கையெழுத்துடன் கூடிய போலி ஆவணங்களை வழங்கியுள்ளார்


இவை போலியானவை என தெரிந்து பணம் கொடுத்து ஏமாந்த நபர்கள் இவரை கேள்வி கேட்டபோது அவர்கள் மீது புகார் அளித்திருக்கிறார் இந்த மோசடி ஆசாமி. தற்போது இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும்  காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a man from kanchipurm looted money from peope in the name of government job


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->