சட்ட விரோதமாக மது பாட்டில்கள் கடத்திய வாலிபர் கைது
A person arrest for liquor smuggling in erode
ஈரோடு மாவட்டத்தில் மது பாட்டில்கள் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பகுதியில் மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலையடுத்து போலீசார், அப்பகுதியில் உள்ள ஜே.ஜே.நகர் பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சாக்கு மூட்டையுடன் வந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் மது பாட்டில்களை கடத்தி சென்றது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், கோவை மாவட்டம் சிறுமுகை பகுதியை சேர்ந்த மாரிசாமி என்பதும், அவர் மது பாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த 180 மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், மாரிசாமியை கைது செய்துள்ளனர்.
English Summary
A person arrest for liquor smuggling in erode