சென்னை மீனம்பாக்கத்தில் இருந்து 178 பேருடன், அபுதாபி செல்லவிருந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு..!
A plane carrying 178 people from Chennai Meenambakkam to Abu Dhabi suffered an engine failure
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஐக்கிய அரபு நாடான அபுதாபிக்கு செல்ல இருந்த விமானத்தில் எந்திர கோளாறு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, குறித்த விமானத்தின் விமானி விமானத்தை இயக்காமல் நிறுத்திவிட்டு, விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் பெரிய சேதம் தடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மீனாம்பாக்கத்தில் இருந்து அபுதாபி கு எத்தியார்ட் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாரானது. அதில் 168 பயணிகள், 10 விமான ஊழியர்கள் என 178 பேர் விமானத்தில் ஏறி இருந்தனர். விமானத்தின் கதவுகள் மூடப்பட்டு, நடைமேடையில் இருந்து விமானம் ஓடுபாதை நோக்கி செல்ல இருந்தபோது திடீரென எந்திரக்கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்த்துள்ளார்.

அதனை தொடர்ந்து, விமான என்ஜினீயர்கள் குழு விமானத்தில் ஏற்பட்ட எந்திரக்கோளாறை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், குறித்த எந்திரக்கோளாறை சரி செய்ய முடியவில்லை என்பதால், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் விமான நிலைய ஓய்வறையில் தங்கவைக்கப்பட்டனர்.
இவ்வாறு விமானத்தில் ஏற்பட்டுள்ள எந்திரக்கோளாறு சரி செய்யப்படாததால் விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட்டுள்ளது. மேலும், குறித்த விமானத்தில் செல்ல இருந்த பயணிகள் அனைவரும் சென்னை நகரில் உள்ள ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டனர். விமானத்தின் எந்திர கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு அபுதாபிக்கு விமானம் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
A plane carrying 178 people from Chennai Meenambakkam to Abu Dhabi suffered an engine failure