திருநங்கையுடன் உல்லாசம்... கழட்டிய பேண்ட் பாக்கெட்டிலிருந்து 65000/- ரூபாய் அபேஸ்... இளைஞர் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தின் புதிய பேருந்து நிலையத்தில் திருநங்கைகள் மற்றும் பெண் பாலியல் தொழிலாளர்களால் கல்லூரி மாணவர்கள் மற்றும்  பேருந்து நிலையத்திற்கு வந்து சொல்வோர் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இங்கு இரவு 10 மணிக்கு மேல் விபச்சாரம் சர்வ சாதாரணமாக நடக்கிறது. இளைஞர்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி அவர்களை அழைத்துச் சென்று திருடும் சம்பவம் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சார்ந்த 21 வயது இளைஞர் ஒருவர் மாடுகளை விற்பதற்காக கேரளாவிற்கு சென்றிருக்கிறார். அங்கு மாடுகளை விற்றுவிட்டு  ஒரு லட்சத்து 55 ஆயிரம் ரூபாயுடன் சேலம்  திரும்பி இருக்கிறார். சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஓமலூர் தனது மோட்டார் சைக்கிளில் சென்றிருக்கிறார் அந்த இளைஞர்.

சேலம் ஐந்து ரோடு பகுதியில் சாலையோரம் நின்ற திருநங்கைகளை கண்டதும் சபலத்தால் அவர்களுடன் சென்றுள்ளார் அந்த வாலிபர். திருநங்கைகள் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சென்று உல்லாசமாக இருந்து விட்டு தனது வீட்டிற்கு திரும்பி இருக்கிறார் இளைஞர். வீட்டிற்கு சென்று தனது தந்தையிடம் பணத்தை கொடுத்த போது அதில் 65 ஆயிரம் ரூபாய் குறைவாக இருந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த வாலிபர் இது தொடர்பாக பள்ளம் பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்த இளைஞரை அழைத்துக் கொண்டு ஐந்து ரோடு பகுதிக்குச் சென்ற போலீசார் திருநங்கைகள் ஹர்ஷிதா மற்றும் அமிதா ஆகியோரிடம் விசாரித்தபோது இளைஞர் தான் பணத்தை கொடுத்தார் என்று கூறினர். ஆனால் அந்த இளைஞர் தான் பேண்ட்டை கழட்டும் போது அதிலிருந்த பணத்தை அவர்கள் எடுத்து விட்டதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து திருநங்கைகளிடமிருந்து  பணத்தை மீட்க காவல்துறையினர் அந்த இளைஞரிடம் ஒப்படைத்தனர். மேலும் அந்த இளைஞரிடம் விசாரணை செய்துவிட்டு  அவரை எச்சரித்து அனுப்பினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A shocking incident happened to a young man who was flirting with transsexuals


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->