கூடலூர் அருகே பழைய இரும்பு கடையில் பயங்கர தீ விபத்து.! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டத்தில் பழைய இரும்பு கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவர்சோலை சாலையில் உள்ள பழைய இரும்பு கடையின் தரைத்தளத்தில் நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயானது சிறுது நேரத்தில் கொழுந்து விட்டு எறிய தொடங்கி கடை முழுவதும் பரவியது. இதனால் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் வெடித்து சிதறின.

இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் இந்த தகவலை எடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது மேலும் தீ விபத்தின் போது கடையில் ஆட்கள் இல்லாததால் பெரும் அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து கூடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A terrible fire broke out in an old iron shop near gudalur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->