சுற்றுலா பயணிகள் வந்த வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து! 4 பேர் பலி! போலீசார் விசாரணை! - Seithipunal
Seithipunal


மலேசிய சுற்றுலா பயணிகள் வந்த வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 4 பேர் பலியானார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் தஞ்சாவூர் காந்திநகர் பகுதியில் இருந்து திருமண நிகழ்ச்சிக்காக டேனியல் என்பவர் காரில் புறப்பட்டார். அந்த காரில் தனது இரண்டு மகள்களும் மற்றும் அவருடைய சித்தப்பா மைக்கில் என்பவரும் ராமநாதபுரத்தில் உள்ள பனையூர் என்ற ஊருக்கு காரில் சென்றிருந்தனர்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து டெம்போ வாகனம் மூலம் வந்த மலேசிய  சுற்றுலா பயணிகள், தஞ்சாவூரிலிருந்து காரில் பயணம் செய்து கொண்டு வந்த டேனியல் மார்க்கண்டேயன்பட்டி என்ற பகுதியில் எதிர்பாராத விதமாக டெம்போ மீது நேருக்கு நேர் மோதி கோர விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த நான்கு பேரும் அச்சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இந்த விபத்தை அறிந்த உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து , டேனியல் அவரது 2 மகள்கள் மற்றும் சித்தப்பா ஆகியோர் உயிரழந்ததை அடுத்து அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து கொண்டு சென்றனர். 

பின்னர் டெம்போவில் வந்த மலேசிய சுற்றுலா பயணிகள் நான்கு பேருக்கு படுகாயம் அடைந்தது. இதில் படுகாயமடைந்தவர்கள் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். 

மேலும், இந்த கோர விபத்து தொடர்பாக தேவகோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A tourist vehicle and a car collided head on 4 people died Police investigation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->