குளிர்பானம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து! போலீசார் விசாரணை! - Seithipunal
Seithipunal


எட்டயபுரம் அருகே கீழ ஈரால் தேசிய நெடுஞ்சாலையில் குளிர்பானங்கள் ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் உள்ள ஆலையிலிருந்து குளிர்பானங்களை ஏற்றிக்கொண்டு, இன்று காலை லாரி ஒன்று புறப்பட்டு ஆந்திரா மாநிலம் விஜயவாடாவுக்குச் சென்று கொண்டிருந்தது. இதில் ஓட்டுநராக தூத்துக்குடி மாவட்டம் அருகேயுள்ள கூட்டுடன்காடு கிராமத்தைச் சேர்ந்த சேட்டையன் (41) என்பவர் ஓட்டினார்.

இந்நிலையில், திருநெல்வேலி வழியாக தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச்சாலை வழியாக வந்த இந்த லாரி, அங்கிருந்து தேசிய நான்கு வழிச்சாலையில் மதுரையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. 

எட்டயபுரம் அருகே கீழ ஈரால் பகுதியில் வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, நான்கு வழிச்சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் சாலை முழுவதும் குளிர்பான பாட்டில்கள் சிதறின.

இந்த விபத்தினால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த எட்டயபுரம் போலீஸார் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சீரமைத்தனர்.

மேலும், போலீஸார் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A truck loaded with soft drinks overturned in an accident Police investigation


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->